Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் நடிகை பிவி ராதா மரணம்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (18:04 IST)
பழம்பெரும் கன்னட நடிகை பிவி ராதா தனது 70 வயதில் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.


 

 
1964 ஆம் ஆண்டு நவகோடி நாராயணா என்ற கன்னட படத்தின் மூலம் பிவி ராதா சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தார். இதுவரை அவர் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எம்ஜிஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் உள்பட பல ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். 
 
கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராதா தீவிர சிகிச்சைக்குப் பின் புற்றுநோயிலிருந்து குணமடைந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
மருத்துவமனையில் சுவாசிக்க முடியாமல் திணறி வந்த ராதா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments