சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த கங்குவா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
படம் நேற்று ரிலீஸாகி பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. இந்நிலையில் 2000 கோடி ரூபாய் டார்கெட் வைக்கப்பட்டு ரிலீஸ ஆன கங்குவா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. தமிழகத்தில் இந்த படம் தோராயமாக 20 முதல் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகி வரும் எதிர்மறை விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் மிகப்பெரிய சரிவு இருகும் என தெரிகிறது.
இந்நிலையில் கங்குவா படம் பற்றி ரிலீஸுக்கு முன்னால் படக்குழுவினர் கொடுத்த பில்டப்புகளை எல்லாம் பாய்ண்ட்களாக போட்டு கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
இது சம்மந்தமாக இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் பதிவு:-
-
* 2,000 கோடி. தமிழின் முதல் பான் இண்டியா ஹிட் இதுதான - ஞானவேல்.
-
* கட்டுப்படுத்த முடியாத காட்டாறு - சிறுத்தை.
-
* இந்தியாவே வாயை பிளந்து பார்க்கும் - சூர்யா.
-
* திரை தீப்பிடிக்கும் - வெற்றி, DOP.
-
100 தடவை பாத்துட்டேன் - மதன் கார்க்கி.
-
சூர்யா அரசியலுக்கு வரனும் - போஸ் வெங்கட்.
-
உலகிலேயே சிறந்த நடிகர் சூர்யாதான் - கருணாஸ்
-
38 மொழிகள். 11,500 ஸ்க்ரீன்கள் - ஞானவேல்
-
2 hrs 10 mnts Goosebumps ஆக இருக்கும் - ஞானவேல்
-
மரத்துல ஏற சொன்னா உடனே சூர்யா சார் சரசரன்னு ஏறிடுவார் - சிறுத்தை.
-
இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டை சீன் இதுல இருக்கு - சிறுத்தை.
-
X லைக் பட்டனை கங்குவா ஐகான் போல மாற்றினார் எலன் மஸ்க் - சூர்யா ஃபேன்ஸ்
-
பாகுபலி எடுக்க எனக்கு இன்ஸ்பிரேசனே சூர்யாதான் - ராஜமௌலி.