Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் படம் ரிலீஸ் ஆகாததை திரையுலகமே கொண்டாடுகிறது… கங்கனா புலம்பல்!

vinoth
புதன், 18 செப்டம்பர் 2024 (09:59 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த படம் பற்றி பேசிய கங்கனா “படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்துள்ளேன்.” எனக் கூறியிருந்தார். இந்த படம்  சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலிஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் சில தடவை அறிவிக்கப்பட்டு தாமதம் ஆன நிலையில் படத்தின் தயாரிப்பாளராக கங்கனா இப்போது பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் “இதற்கு முன்னர் பத்மாவத் மற்றும் உட்தா பஞ்சாப் போன்ற படங்களுக்கு நெருக்கடி வந்த போது அரசு உதவி செய்து படத்தை ரிலீஸ் செய்ய வைத்தது.ஆனால் எனக்காக யாருமே குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக திரையுலகம் என்னைக் கைவிட்டு விட்டது.  நான் தயாரித்த திரைப்படம் வெளியாகவில்லை என அவர்கள் கொண்டாடவே செய்கிறார்கள்’ எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments