Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக குழந்தை பெறுபவர்களை ஜெயிலில் போட வேண்டும்! – கங்கனா சர்ச்சை கருத்து!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:06 IST)
இந்தியாவில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் வர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் பெரும் சிக்கலாக மாறி வரும் நிலையில் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்நிலையில் சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் தொகை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் “இந்தியாவில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்” என கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்தை நக்கல் செய்யும் விதமாக பதிவிட்ட காமெடி நடிகை சலோனி கவுர் “கங்கனா குடும்பத்திலும் ஒரு சகோதரர், சகோதரி என மூன்று பேர் மொத்தம் உள்ளனர்” என சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள கங்கனா தாத்தா காலத்தில் பலர் 8 குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டனர். அப்போது இருந்தது போலவே இப்போதும் வாழ முடியாது மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவை போல கடுமையான சட்டங்கள் தேவை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments