Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடிடிகளுக்கு சென்ஸார் வேண்டும் – கங்கனா போர்க்கொடி!

Advertiesment
ஓடிடிகளுக்கு சென்ஸார் வேண்டும் – கங்கனா போர்க்கொடி!
, செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:54 IST)
நடிகை கங்கனா ரனாவத் ஓடிடி பிளாட்பார்ம்களுக்கு சென்ஸார் வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சுஷாந்த் மரணம் தொடர்பான கருத்துகள், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு சிவசேனாவுடன் மோதல் என பாலிவுட்டில் இப்போது கங்கனா மோதாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு எல்லோருடனும் சண்டை போட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி விதிகளை மீறி கங்கனாவின் அலுவலகம் கட்டப்படுவதாக மும்பை நகராட்சி கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்தது.

இந்நிலையில் இப்போது அவரின் கவனம் ஓடிடி பிளாட்பார்ம்கள் பக்கம் சென்றுள்ளது. ஓடிடிகளுக்கு செனசார் அவசியம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ‘திரையரங்கம் என்பது குடும்பத்தினருடன் சென்று படம் பார்க்கும் இடமாக இருந்தது’ என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஓடிடி பிளாட்பார்ம்களுக்கு சென்சார் இல்லை என்பதால் ஆபாசங்கள் அதிகமாகி வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரைசதம் அடித்து தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிய மன்தீப் – உருக்கமான நிகழ்வு!