Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைவி படத்துக்காக களம் இறங்குகிறது கேப்டன் மார்வெல் டீம்!!

Advertiesment
தலைவி படத்துக்காக களம் இறங்குகிறது கேப்டன் மார்வெல் டீம்!!
, வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (13:14 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்று படமான ’தலைவி’யில் ஹாலிவுட் கேப்டன் மார்வெல் குழு ஒன்று களம் இறங்குகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை “தலைவி” என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகியாய் வலம் வந்து, அரசியலில் புகுந்து பல மாற்றங்களை செய்தவர் ஜெயலலிதா. ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார்.
webdunia

இந்த படத்திற்காக முழுவதுமாக தன்னை அர்ப்பணித்து கொண்டு தயாராகி வருகிறார் கங்கனா. இதற்காகவே பரதநாட்டியம் மற்றும் தமிழ் மொழியினையும் கற்று வருகிறார் கங்கனா. இந்நிலையில் அசப்பில் ஜெயலலிதா போலவே தோற்றம் தர கங்கனா முயற்சித்து வருகிறார். இதற்கான முக ஒப்பனை சோதனை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
webdunia

இதற்காக பிரத்யேகமாக ஹாலிவுட் படங்களான கேப்டன் மார்வெல், ப்ளேட் ரன்னர் போன்ற படங்களில் ஒப்பனையாளராக பணிபுரிந்த ஜேசன் காலீன்ஸ் மற்றும் குழுவினரை களம் இறக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி. இதுகுறித்து கருத்து தெரிவித்த கங்கனாவின் சகோதரி ரங்கோலி “கங்கனா தனது ஒவ்வொரு படத்தையுமே மிக ஈடுபாடுடன் செயல்படுபவர். இந்த படத்திற்கு மற்ற படங்களையும் விட அதிகளவில் தனது உழைப்பை செலுத்தி கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த மேக் அப் புகைப்படங்களை தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார் ரங்கோலி.
webdunia


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாண்டியை குறை சொன்ன லொஸ்லியா - லெஃப்ட் அண்ட் ரைட் விட்ட தர்ஷன்!