சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். மேலும் அவரே ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தும் உள்ளார். இந்த படத்தில் சீக்கியர்களைப் பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சென்சாரில் இந்த படம் சிக்கி சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதன் பின்னர்தான் படத்துக்கு சென்சார் வாங்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே சென்றது. தற்போது பல கட்டத் தாமதங்களுக்குப் பிறகு படம் ஜனவரி 17 ஆம் தேதி ரிலீஸானது.
இந்நிலையில் முதல் இரண்டு நாட்களில் இந்த படம் சுமார் 6 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்கனாவின் சமீபகால தோல்விகளை ஒப்பிட இது நல்ல வசூல் என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் தொடர்ந்தால் படம் லாபகரமாக அமையும் என சொல்லப்படுகிறது.