Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுதான் வலதுசாரிக்கும், இடதுசாரிக்கும் உள்ள வித்தியாசம்! – ரிஹானாவின் ஆபாச புகைப்படத்தை பதிவிட்ட கங்கனா!

Advertiesment
Cinema
, புதன், 3 பிப்ரவரி 2021 (15:29 IST)
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் ரிஹானாவை தாக்கி பேசிய கங்கனா ரனாவத் தற்போது ரிஹானாவின் புகைப்படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் விவசாய போராட்டம் குறித்த செய்தி ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்த அமெரிக்க பாப் பாடகி ரிஹானா “இதுபற்றி நாம் ஏன் பேசவில்லை?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் “அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்” என திட்டியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் பதிவிட்டுள்ள கங்கனா ரனாவத் வலதுசாரிக்கும், இடதுசாரிக்கும் உள்ள வித்தியாசம் என கூறி தான் பூஜை செய்யும் புகைப்படத்தையும், ரிஹானாவின் ஆபாச புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதற்கு இடதுசாரிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேருக்கு நேர் மோதலைத் தவிர்த்த இளம் நடிகர்கள்… ஒருவேளை பழைய பாசமா இருக்குமோ!