Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா உணர்ந்ததை நானும் உணர்ந்தேன்! தலைவி பட விழாவில் கங்கனா பேச்சு!

Advertiesment
Kangana Ranaut
, புதன், 24 மார்ச் 2021 (15:45 IST)
தலைவி படத்தில் நடிக்கும் போது ஜெயா அம்மா உணர்ந்ததை நானும் உணர்ந்தேன் என கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

நடிகை கங்கனா நடிப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் மூன்று மொழிகளில் உருவாகி ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மும்பையில் நேற்று இரவு நடந்தது.

அப்போது பேசிய கங்கனா ‘மும்பையில் என் அலுவலகம் இடிக்கப்பட்ட போது நான் தலைவி படத்தில் நடிக்க கிளம்பிக் கொண்டு இருந்தேன். படத்தில் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது நான் ஜெயலலிதா அனுபவிப்பதை நானும் அனுபவிப்பது போல உணர்ந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ பணியில் முதல் நாள்: சூப்பர் சிங்கர் ப்ரியங்காவின் இன்ஸ்டாகிராம் பதிவு!