ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில், 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
									
										
								
																	
	 
	பேய்ப் படங்களுக்கு புதுவிதமான கலரைக் கொடுத்த படம், ராகவா லாரன்ஸின் ‘முனி’. அந்த ஃபார்முலா வெற்றிபெற, அப்படியே தொடர்ந்து இரண்டு, மூன்றாம் பாகங்களை எடுத்து வந்தார். தற்போது ‘முனி 4’ (காஞ்சனா 3) ஆம் பாகத்தை  எடுக்கப் போகிறார்.
 
									
										
			        							
								
																	
	 
	இந்தப் படத்தில் மொத்தம் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். ஒரு பிரபல நடிகையும், இரண்டு புதுமுக ஹீரோயின்களும் நடிக்க இருக்கின்றனர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ‘முனி’ முதல் பாகத்தில் நடித்த வேதிகாவே இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.