கமலின் 'இந்தியன் 2' மற்றும் 3 ஆம் பாகம் ரிலீஸ் தேதி? வெளியாகும் தகவல்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (16:45 IST)
இந்திய சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ பட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்தியன் படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் இதன் ஷூட்டிங் முடிந்த பின்னர், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகி படம் இப்படத்தின் இசை உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில்,  இந்தியன் 2 பட  இன்ட்ரோவை  இன்று மாலை 5:30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யவுள்ளார் என்று நேற்று  லைகா நிறுவனம் தெரிவித்தது.

அதேபோல் இந்தியன் பட இந்தி இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் அமீர்கானும், மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் மோகன் லாலும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், தெலுங்கில்  ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் ராஜமெளலி வெளியிடவுள்ளதாக அறிவித்தது.

கமல்- ஷங்கர் கூட்டணியில் 2 வது படமாக உருவாகி வரும் இந்தியன் 2 பட ஷீட்டிங்கின்  போதே இந்தியன் 3 ம்  பாகமும் தயாராகி வருகிறது.

தற்போது இந்தியன் 2 படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதேபோல் இந்தியன் 3 ம்  பாகத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

மீண்டும் போலீஸ் உடையில் சூர்யா… எந்த படத்தில் தெரியுமா?

பெயரை சுருக்க சொன்னது அவர்தான்… ஆனா காரணம் சொல்லமுடியாது – ஆர் ஜே பாலாஜி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments