Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் முடிந்தாலும் ரிலீஸ் அடுத்த வருடம்தானா?... தள்ளிவைக்கப்படும் தக் லைஃப்!

vinoth
புதன், 18 செப்டம்பர் 2024 (14:26 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் சிம்பு உள்ளிட்டோர் காட்சிகள் படமாக்கப்பட்டு மொத்த படமும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

முதலில் இந்த படம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸாகும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போத் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவுக்கு மூன்று மாத சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments