என்ன சந்தீப் கிஷனும் இல்லையா… ஜவ்வாக இழுக்கும் சஞ்சய்யின் படம்!

vinoth
புதன், 18 செப்டம்பர் 2024 (14:22 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை. அதன் பின்னர் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது படத்துக்கான நடிகர் நடிகைகள் தேடும் படலம் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்த படத்துக்காக சஞ்சய் ஹரிஷ் கல்யாண், கவின் உள்ளிட்ட பல நடிகர்களை சந்தித்துக் கதை சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை யார் கதாநாயகன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடைசியாக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் உறுதி இல்லையாம். லைகா நிறுவனம் வேட்டையன், விடாமுயற்சி மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தைக் கண்டுகொள்ளவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

நீண்ட தாமதத்துக்குப் பின்னர் வெளியான ‘டான் 3’ அப்டேட்!

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ ஷூட்டிங் நிறைவடைந்தது..!

அடுத்த கட்டுரையில்
Show comments