Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக்லைஃப் ஷூட்டிங் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (13:58 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகையான அபிராமி இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அதே போல கௌதம் கார்த்திக்கும் ஒரு வேடத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாத இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் முடித்ததும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments