பழைய டைட்டிலை வேண்டாம் என சொன்ன கமல்ஹாசன்… புதிதாக தேடும் ஹெச் வினோத்!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:49 IST)
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங்கை பெரும்பகுதி முடித்துள்ள கமல் அடுத்து பிரபாஸின் கல்கி 2898 படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இப்போது கல்கி முதல் பாகத்துக்கான தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளார் கமல். இப்போது இந்தியன் 2 இறுதிகட்ட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதன் பிறகு மணிரத்னம் மற்றும் ஹெச் வினோத் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹெச் வினோத் படத்துக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலை வைக்கலாம் என கமல் முதலில் பரிந்துரைக்க, வினோத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அந்த டைட்டில் வேண்டாம் என கமல்ஹாசன் கூறிவிட்டாராம். அதனால் இப்போது புதிய டைட்டில் தேடும் பணியில் ஹெச் வினோத் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments