Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

vinoth
புதன், 3 ஜூலை 2024 (06:45 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்துக்காக பல்வேறு நாடுகளில் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார் கமல்ஹாசன். அப்போது ஒரு நிகழ்வில் பேசும்போது “இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க ஒத்துக் கொண்டதற்குக் காரணமே இந்தியன் 3 படம்தான். அதில் நான் சேனாபதியின் தந்தையாக நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் குறைவான நேரமே இடம்பெறுவார் என ஒரு தகவல் பரவி வருகிறது. கமலின் இந்த பேச்சு அதை உறுதி செய்வது போல அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments