Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் 7-ல் கமல்ஹாசனின் வியக்க வைக்கும் சம்பளம்!

பிக்பாஸ் 7-ல் கமல்ஹாசனின் வியக்க வைக்கும் சம்பளம்!
, வியாழன், 22 ஜூன் 2023 (13:00 IST)
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 6சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் சீசன் ஜூலை மாதத்திலேயே தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தமுறை கமல்ஹாசனுக்கு இதுவரை அவர் வாங்காத தொகை சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆறாவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 70 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனில் கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு படத்துக்கு கமல்ஹாசன் வாங்கும் சம்பளத்துக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"டாடா" படத்தால் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்த கவின் - சொத்து மதிப்பு கோடியில் புரளுதேப்பா!