Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா நடிக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’- முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (14:59 IST)
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் கருமேகங்கள் கலைகின்றன. படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் நாயகியாக அருவி மற்றும் பாயாசம் ஆகிய படங்களின் நாயகி அதிதி பாலன் இணைந்துள்ளார். இதை அறிவித்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்துள்ளார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

அதன் பின்னர் பேசிய அவர் “தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவரான பாரதிராஜா, இந்தளவுக்கு ஒரு படத்தை புகழ்ந்து பேசி நான் பார்த்ததில்லை. இந்த படத்தில் நடித்த பிறகு ஓய்வு பெறும் முடிவைக் கூட எடுத்துவிடுவேன் என அவர் கூறினார். அதனால் இந்த படத்தை உடனடியாக பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அஜித்தின் முதல் படத்திற்கு நான் தான் உதவி செய்தேன்: சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்..!

மகன் விஜய் கட்சி குறித்து முதன்முறையாக மனம் திறந்த எஸ்.ஏ.சி.. என்ன சொன்னார் தெரியுமா?

’கூலி’ படத்தில் நடிக்கிறேன்.. ‘மோடி’ படத்தில் நடிக்கவிலை.. ஆனால்.. சத்யராஜ் பேட்டி..!

பாலஸ்தீன் மக்களை கொன்று குவித்த இஸ்ரேல்..! கண்டித்து பதிவிட்ட த்ரிஷா, சமந்தா!

வித்தியாசமான ஆடையில் ஹன்சிகா நடத்திய ஸ்டன்னிங்கான போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments