Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியன் 2 நீளம் குறித்து ரிலீஸுக்கு முன்பே அதிருப்தி தெரிவித்த கமல்ஹாசன்… காதுகொடுக்காத ஷங்கர்!

Advertiesment
இந்தியன் 2 நீளம் குறித்து ரிலீஸுக்கு முன்பே அதிருப்தி தெரிவித்த கமல்ஹாசன்… காதுகொடுக்காத ஷங்கர்!

vinoth

, செவ்வாய், 16 ஜூலை 2024 (07:47 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் ஜூலை 12 ரிலீஸானது.இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன. முக்கியமாக வழவழ என்று நீளும் நீண்ட சொற்பொழிவுக் காட்சிகள் இன்றைய ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளன.

முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த வசனம், திரைக்கதை மேக்கப் மற்றும் நடிப்பு என எதுவும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனாலும் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆனால் அடுத்த நாளே வசூல் படுத்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்த விடுமுறை நாட்களிலும் வசூல் தொடர்சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தின் நீளத்தை 15 நிமிடங்கள் குறைத்து மீண்டும் சென்சாருக்கு அனுப்பியுள்ளது படக்குழு. ஆனால் படத்தின் ரிலீஸூக்கு முன்பே கமல்ஹாசன் படத்தின் நீளம் குறித்து தனது அதிருப்தியை லைகா நிறுவனத்திடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் லைகா சொன்ன அந்த விஷயத்தை இயக்குனர் ஷங்கர் காதுகொடுத்து கேட்கவேயில்லையாம். அதே போல படக்குழுவினர் பலரும் நீளத்தைக் குறைக்க வேண்டும் என சொன்னபோதும் ஷங்கர் கேட்கவேயில்லை என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா ரசிகர்களுக்கு சுப்பர் அப்டேட்… பிறந்தநாளில் கங்குவா முதல் சிங்கிள்!