Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தையா படத்தில் நடிக்கிறாரா கமல்? உண்மைத் தகவல் இதுதான்!

முத்தையா படத்தில் நடிக்கிறாரா கமல்? உண்மைத் தகவல் இதுதான்!
, செவ்வாய், 29 மார்ச் 2022 (15:15 IST)
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சமீபமாக தகவல்கள் பரவி வருகின்றன.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. அதன் பின்னர் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இப்போது கார்த்தியை வைத்து அவர் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் கிராமத்து கதை ஒன்றில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக முத்தையாவிடம் கதைக் கேட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலில் முழுமையான உண்மை இல்லையாம். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை முத்தையா இயக்க, அதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா தாண்டியும் செல்லும் மாநாடு… சிம்பு ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்!