Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் & மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் தேதி இதுதானா?

vinoth
புதன், 16 அக்டோபர் 2024 (09:37 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்றார் இயக்குனர் மணிரத்னம். இதையடுத்து அவர் இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கில்’ திரைப்படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம்?

வாடிவாசல் படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது- வெற்றிமாறன் பொறுப்புத் துறப்பு!

ரெட்ரோ படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments