Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் லைகா பிரச்சனை தீர காரணமாக இருந்த கமல்ஹாசன்!

vinoth
புதன், 8 ஜனவரி 2025 (11:15 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதையடுத்து படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப் போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் படம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்காமல் ஷங்கர் அடுத்த படத்தைத் தொடங்கக் கூடாது எனக் கூறி லைகா நிறுவனம் ராம் சரண் தேஜாவுக்கு நெருக்கடி கொடுத்தது. மேலும் அவர்களுக்குள் பண விஷயத்திலும் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதனால் கேம்சேஞ்சர் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்க லைகா நிறுவனம் சில முயற்சிகளை தயாரிப்பாளர் சங்கம் மூலமாக மேற்கொண்டது. ஆனால் இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து தற்போது சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியக் காரணமாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்தான் என சொல்லப்படுகிறது. அவர் அமெரிக்காவில் இருந்து வீடியோ காலில் பேசி இந்தியன் 3 படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு படத்தை முடித்துத் தருவதாக சொல்லியுள்ளாராம். அதையடுத்து ஷங்கரும் லைகா நிறுவனமும் சுமூகமாகப் போயுள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேன் இந்தியா படமாக உருவாகும் ஜி வி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’.. முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

காதல், கல்யாணம் பற்றிய இன்றைய இளைஞர்களின் பார்வையை அலசுகிறதா காதலிக்க நேரமில்லை?… டிரைலர் எப்படி?

மத கஜ ராஜா படத்தின் ரிலீஸைப் பார்க்க முடியாமல் போன ஐந்து நடிகர்கள்!

அஜித் எப்படி இருக்கிறார்… அணி வீரர் ஃபேபியன் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் பட்டியலில் சூர்யாவின் கங்குவா… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments