Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்ம catchy-ஆன வரிகளோடு வருகிறது இந்தியன் 2 முதல் சிங்கிள்!

vinoth
வியாழன், 25 ஏப்ரல் 2024 (11:36 IST)
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஜூன் 7 ஆம் தேதி தனுஷின் ராயன் வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் கட்ட ப்ரமோஷனாக படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு துள்ளலான பாடல் ஒன்று ரிலீஸாக உள்ளதாம். பாடலின் வரிகள் “தாத்தா வர்றாரு தாத்தா வர்றாரு” என்று அனைவரையும் கவரும் விதமாக எளிமையாக இருக்குமாம். இந்த பாடலை சமீபத்தில்தான் படக்குழுவினர் படமாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments