விஜய்க்கு கில்லி-னா… அஜித்துக்கு…? மே 1 ஆம் தேதி ரி ரிலீஸ் ஆகும் ‘பில்லா’

vinoth
வியாழன், 25 ஏப்ரல் 2024 (11:31 IST)
சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். இதில் முதல் ரிலீஸின் போது ஹிட்டாகாத படங்கள் கூட இப்போது ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன.

சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. இதெல்லாவற்றுக்கும் உச்சமாக விஜய்யின் கில்லி ரி ரிலீஸிலேயே 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் போட்டியாளரான அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பில்லா திரைப்படம் அவரின் பிறந்தநாளை ஒட்டி மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments