Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறைந்த நடிகர்- எழுத்தாளர் கிரேஸி மோகனின் மனைவி நளினி காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

மறைந்த நடிகர்- எழுத்தாளர் கிரேஸி மோகனின் மனைவி நளினி காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!
, வியாழன், 20 ஏப்ரல் 2023 (08:12 IST)
நாடக உலகில் கோலோச்சிய கிரேஸி மோகன், தமிழ் சினிமாவுக்கு கமல்ஹாசனால் அறிமுகப்படுத்தப்பட்டார். கமல்ஹாசனோடு அவர் இணைந்து பணியாற்றிய அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, சதி லீலாவதி, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்கள் இன்றும் எவர்கிரீன் நகைச்சுவை படங்களாக உள்ளன. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கிரேஸி மோகன் உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு காலமானார்

இந்நிலையில் இப்போது அவரின் மனைவி நளினி அவர்களும் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  காலஞ்சென்ற நளினி அவர்களின் மறைவுக்கு கமல்ஹாசன் தெரிவித்துள்ள அஞ்சலிக் குறிப்பில் “னக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்"  எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வனுக்கே ப்ரமோஷன் பண்றாங்க… நடிகர் விமல்-ஐ வறுத்தெடுத்த அமீர்!