நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ரிலீஸானது.
அப்போது பேசிய நடிகர் ஜோஜு ஜார்ஜ் “ கமல் சார் தன்னுடைய ஐபேட்டில் 400க்கும் மேற்பட்ட திரைக்கதைகள் வைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைக்கதையில் எதாவது வேலை செய்து கொண்டிருப்பார்” எனக் கூறியுளார்.