Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனம் பதைக்கிறது… சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வது என தெரியவில்லை- கமல்ஹாசன் உருக்கம்!

vinoth
வெள்ளி, 26 ஜனவரி 2024 (10:05 IST)
தமிழ் சினிமாவில் இசைஞானி எனக் கொண்டாடப்படும் இளையராஜாவின் மகளான பவதாரணி நேற்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக இயற்கை எய்தினார். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். பவதாரணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். பாரதி படத்தில் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் அவரது பாடும் திறமைக்கு சான்றாக அமைந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இலங்கையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 47. அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக அவரது சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா இலங்கைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கலில் “மனம் பதைக்கிறது. அருமை சகோதரர் இளையராஜாவை எப்படி தேற்றுவது என தெரியவில்லை. அவரின் கைகளை மானசீகமாக பற்றிக் கொள்கிறேன். பவதாரணியின் மறைவு பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாதது.  இந்த பெருந்துயரில் இளையராஜா மனதை இழக்காதிருகக் வேண்டும். பவதாரணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால திரையுலக வாழ்க்கை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments