Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துக்காக வில்லன் தேடும் ஆதிக் ரவிச்சந்திரன்… லிஸ்ட்டில் மூன்று பேர்கள்!

vinoth
வெள்ளி, 26 ஜனவரி 2024 (09:25 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிந்து படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்ததாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கான வில்லனை தேடும் பணியில் இப்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வருகிறாராம். அவர் லிஸ்ட்டில் எஸ் ஜே சூர்யா, அரவிந்த் சாமி மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் இருக்கின்றனராம். அவர்களின் தேதியை பொறுத்து இந்த படத்தில் யார் நடிப்பார் என்பது முடிவாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments