Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பறிவ் சகோதரர்களோடு கமல்ஹாசன் இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

vinoth
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (11:10 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கடந்த வாரம் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் இந்த படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சென்ற கமல்ஹாசனுடன் அன்பறிவ் சகோதரர்களும் சென்று திரைக்கதையை முடித்துத் திரும்பினர். இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றி மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 250 கோடி ரூபாய் எனவும், அதனால் இந்த படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனத்திடம் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் இந்தியன் 3 பட வேலைகள்.. லண்டனுக்கு சென்ற ஹார்ட் டிஸ்க்!

ஹீரோ வேடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறாரா சந்தானம்?.. திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

ஸ்ரீ மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்… தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் – குடும்பத்தினர் அறிக்கை!

விஜய் சினிமாவை விட்டு போக மாட்டார்.. போக கூடாது! - ‘சச்சின்’ பார்த்த மிஷ்கின் ரியாக்‌ஷன்!

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments