Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு மாறி ரிலீஸ் ஆக உள்ள கமலின் திரைப்படம்

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (16:10 IST)
நடிகர் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் டிஜிட்டலாக மாற்றப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.

இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இதனால் கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. பல இடங்களில் தாணு கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த படத்துக்கான பார்வையாளர்கள் உருவாகினர்.

இந்நிலையில் இப்போது 'ஆளவந்தான்' படத்தை டிஜிட்டலாக்கி மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வந்தாலும், இப்போது விக்ரம் வெற்றியை அடுத்து இந்த வேலைகள் சூடுபிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments