Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#கமல்233: ஹெச்.வினோத் கூறிய கதையைக் கேட்டு இம்ப்ரஸான கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (21:41 IST)
கமல்ஹாசன் அடுத்து வினோத் இயக்கத்தில்  புதிய படமொன்றில் நடிக்க உள்ள நிலையில், இதுபற்றி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வினோத். இவர்  இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்,   நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள்   நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து  இவர் கமலை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘’கமல்ஹாசன் மற்றும்  ஆர். மகேந்திரன் தயாரிப்பில்,  இயக்குனர் ஹெச்.வினோத்  எழுதி, இயக்கவுள்ள  ‘’கமல்233’’ படத்தில்  கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 152 வது படம் என்று அறிவித்தது.

இந்த நிலையில், இப்படம் விவசாயம் தொடர்பாக கதை என்று தகவல்கள் வெளியான நிலையில் சமீபத்தில் ஊடகத்திற்குப் பேட்டியளித்த வினோத், ''இப்படம் விவசாயம் சம்பந்தமான கதையில்லை எனவும், கமலிடம்,  2-3  கதைகளை கூறியதாகவும், அதில், ஒன்றில் இம்ப்ரஸாகியதால், அதன் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments