Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்தில் சர்ப்ரைஸ்… டெக்னாலஜி மூலமாக வரும் இளமை தோற்றத்தில் கமல்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:00 IST)
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் கமல்ஹாசன் நடித்த பழைய விக்ரம் படத்தின் தோற்றத்தில் தோன்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஐரிஷ்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளார்களாம். இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் டிரீட்டாக அமையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments