Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் உனை நீங்கமாட்டேன், நீங்கினால்..” – தீடீர்னு இளையராஜா பாடிய பாட்டு- வைரல் டிவீட்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (09:48 IST)
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய நிலையில் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து சர்ச்சைகளைக் கிளப்பின.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வந்தனர். இந்த சர்ச்சை குறித்து பேசிய இளையராஜா, தான் தன் மனதில் பட்டதை பேசியுள்ளதாகவும், அதை திரும்ப பெறப்போவதில்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வந்தன. இந்நிலையில் தற்போது இளையராஜாவின் ஒரு டிவீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த டிவீட்டில் தளபதி படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலின் சில வரிகளைப் பாடி பகிர்ந்துள்ளார் இளையராஜா. சமீபத்தைய சர்ச்சைகளை அடுத்து இப்போது இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments