Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 படத்துக்காக கமலுக்கு மீண்டும் மேக்கப் டெஸ்ட்!

இந்தியன் 2 படத்துக்காக கமலுக்கு மீண்டும் மேக்கப் டெஸ்ட்!
, புதன், 21 செப்டம்பர் 2022 (15:10 IST)
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் இன்னும் கலந்துகொள்ளவில்லை.

இந்த படத்துக்காக ஷங்கர் மாதத்தில் 10 நாட்கள் ஒதுக்கியுள்ளாராம். அதில் அவர் கமல் சம்மந்தமான காட்சிகளை படமாக்குவாராம். இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள ஷூட்டிங் சென்னையில் அதிகளவில் அரசு அலுவலகங்களில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. முந்தைய பாகத்தைப் போலவே லஞ்சம் சம்மந்தப்பட்ட காட்சிகளை இங்கு படமாக்கியுள்ளார்களாம்.

தற்போது நடந்துவரும் ஷூட்டிங்கில் காஜல் அகர்வால் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. நாளை முதல் கமல் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். இதற்காக கமலுக்கு இந்தியன் 2 மேக்கப் டெஸ்ட் மறுபடியும் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமர்சனம் செய்வதால் எனக்கு காசு வருகிறதா?.... நடிகர் கூல் சுரேஷ் அழுகை வீடியோ!