Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல் முத்தையா கூட்டணியில் விரிசல்? காரணம் இந்த ஹீரோதானா?

கமல் முத்தையா கூட்டணியில் விரிசல்? காரணம் இந்த ஹீரோதானா?
, புதன், 13 ஏப்ரல் 2022 (17:03 IST)
கமல் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்பட்டது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இப்போது கார்த்தியை வைத்து அவர் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஆர்யா நடிப்பில் முத்தையா ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆர்யாவை வைத்து அதே படத்தை அவர் வேறு நிறுவனத்துக்காக இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரைப்பட தொழிலை கபளீகரம் செய்கிறது உதயநிதியின் நிறுவனம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!