கமல் விக்ரம் படத்துக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மகேஷ் நாராயணன் c u soon மற்றும் மாலிக் ஆகிய படங்களின் மூலமாக வெற்றிகரமான இயக்குனராக அறியப்படுபவர்.
இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மலையாள நடிகர் மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் கமல் மற்றும் மம்மூட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக மலையாள சினிமாவைச் சேர்ந்த சுசின் ஷ்யாம் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் மலையாளத்தில் வெளியான கும்பலாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.