Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்து கமல் கூறியது என்ன தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (09:30 IST)
இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் திடீரென காலமானார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஸ்ரீதேவியின் மறைவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஸ்ரீதேவியுடன் பல திரைப்படங்கள் இணைந்து நடித்தவரும், ஸ்ரீதேவியின் குடும்ப நண்பர்களில் ஒருவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி மறைவு குறித்து கூறியதாவது: 'மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியுடன் கமல்ஹாசன், 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், தாயில்லாமல் நானில்லை, குரு, வறுமையின் நிறம் சிகப்பு,  சங்கர்லால், மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்