Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து குறித்து கமல் டுவீட்

Advertiesment
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து குறித்து கமல் டுவீட்
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (19:06 IST)
சிவகாசியில் அடிக்கடி பட்டாசு தொழிற்சாலை விபத்து ஏற்பட்டு வருவதும் அதில் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தெரிந்ததே. ஆனால் இன்று கடலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர் இதில் பட்டாசு ஆலை உரிமையாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பட்டாசு விபத்து குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கூறியுள்ளதாவது:
 
மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து. 9 உயிர்பலிகள், குருங்குடி கிராமத்தில். வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும், இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மைக்கேல் மதனகாமராஜன் 2’ சாத்தியமா? இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் பேட்டி