Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் புரமோ வீடியோ: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கமல்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (19:27 IST)
பிக்பாஸ் புரமோ வீடியோ: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கமல்!
கமலஹாசன் தொகுத்து வழங்கும் உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ விடியோவை கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சுமார் இரண்டு நிமிடங்கள் ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோவில் பிக்பாஸ் புரமோஷன் மட்டுமின்றி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு காட்சிகளும் உள்ளதால் கமல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த வீடியோவின் இறுதியில் அவர் ’தப்பு என்றால் தட்டி கேட்பேன் நல்லது என்றால் தட்டிக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் மூன்று வருடங்களாக பிக்பாஸ் உங்களுக்கு பிக்பாஸ் குரல் பழகிவிட்டது என்றும், இப்போது இந்த குரல் உங்களுக்குள்ளே ஒலிக்கத் தொடங்கி விட்டது என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் ’சொன்னபடி கேளு சொல்கிறது பாஸ்’ உங்களில் நான் என்றும் கமலஹாசன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கமலஹாசன் நடித்த சிங்காரவேலன் படத்தில் இடம்பெற்ற சொன்னபடி கேளு என்ற பாடலின் பின்னணியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காட்சிகள் மற்றும் பிக் பாஸ் புரோமோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments