Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்: கமல்ஹாசன் அறிவிப்பு..!

sivakarthikeyan
, புதன், 3 மே 2023 (13:08 IST)
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது என்றும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அறிவிப்பு வெளியானது.
 
இந்த படத்தின் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து முதல் முறையாக ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு.. ‘தங்கலான்’ படப்பிடிப்பு தாமதம் ஆகிறதா?