Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

Mahendran
செவ்வாய், 3 ஜூன் 2025 (13:34 IST)
என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
 
கமல்ஹாசன் நடித்த 'தக்லைஃப்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக வர்த்தக சபை தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
 
"என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் தான் பேசினேன்.
 
சிவராஜ்குமார் மீது பாசமாக கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. என்னால் சிவராஜ்குமார் சில அவமானங்களை சந்திக்க நேர்ந்தது என்பது வருத்தமாக உள்ளது.
 
கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த விவாதமும் கிடையாது. எந்த விதத்திலும் கன்னட மொழியை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
 
என்  வாழ்நாள் முழுவதும் கன்னட மக்கள் அளித்த அன்பும் ஆதரவையும் போற்றி வருகிறேன். கன்னட மக்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்திருக்கும் மரியாதை எனக்கு தெரியும்.
 
நான் எப்போதும் பொது அமைதிக்கு இடையூறாக இருக்க மாட்டேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதனை அடுத்து, இந்த பிரச்சனை முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெழுகு சிலை போல வித்தியாசமான உடையில் ரைசா வில்சனின் போட்டோ ஆல்பம்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஷுட் நடத்திய அதிதி ஷங்கர்!

மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்… ஜி வி பிரகாஷ் படத்தில் ஒப்பந்தம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்னது கமல் ரசிகனா?... இரு உன்ன பாத்துக்குறேன் – லோகேஷை மிரட்டிய ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments