Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக கமல்ஹாசன்...’’சகலகலா வல்லவர் ’’என்பது இதுதானா ?

இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக கமல்ஹாசன்...’’சகலகலா வல்லவர் ’’என்பது இதுதானா ?
, வெள்ளி, 17 ஜூலை 2020 (15:38 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதம் 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 19 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இனிமேல் சினிமா பட ஷூட்டிங் எப்போது நடக்குமென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திரையரங்குகளும் திறக்கப்படததால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. எனவே வெப்சீரிஸில் முன்னணி நடிக்க நடிகர்கள் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 வருடங்களாக மக்களின் ஆதரகைப்பெற்று பெரும் பொழுது போக்கு அம்சமாக இருந்த 

பிக் பாஸ் சீசன் -4 நிகழ்ச்சி தற்போது நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கொரொனா காலமாக இருப்பதால் இதில் அதிக எண்ணிக்கைலானவர்கள் பணியாற்றவேண்டிய தேவை உள்ளதால் தற்போது இதன் படப்பிடிப்புகள் நடத்துவதில் சாத்தியம் இருக்காது என தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில் கமலின் தலைவன் இருக்கிறான், இந்தியன் -2, அவர் தயாரித்து ரஜினி நடிக்கவுள்ள என அடுத்தடுத்து அவர் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் இளம் ஹீரோக்கள் தற்போது  ஓடிடி தளத்தில் தங்கள் படங்களை வெளியிடுவதைப் போன்றும் நடிப்பதைப் போன்று சீனியர் நடிகராக கமல் ஓடிடி தளத்தில் நடிக்க கதை கேட்டு வருவதாகவும், அதில் தானே இயக்கி நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

எப்போது தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்ளும் நடிகர் கமல்,  இந்த வெப் தொடரிலும், ஓடிடி தளத்திலும் நுழைந்து விட்டால் சகலகலா வல்லவரான அவர் சினிமாவில் தொடாத துறைகளே இல்லை என பலரும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்குகள், வழிபாட்டு தலங்களுக்கு தற்போது தளர்வுகள் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ