Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்-பா ரஞ்சித் இணையும் படத்தின் கதை இதுவா?

கமல்-பா ரஞ்சித் இணையும் படத்தின் கதை இதுவா?
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (22:09 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. கமல் மற்றும் பா ரஞ்சித் இணையும் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிஜ நிகழ்வின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று செய்திகள் கசிந்துள்ளது 
 
ஏற்கனவே சார்பாட்டா பரம்பரை திரைப்படமும் உண்மை கதையின் அடிப்படையில் வைத்து உருவான கதை என்பது தெரிந்ததே. அதேபோல் கமலுடன் பா ரஞ்சித் இணையும் படத்திலும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையை எழுதி இருப்பதாகவும் அந்த கதையை கேட்டு ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்களை முடித்துவிட்டு பா ரஞ்சித் படத்தில் கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வின் படத்தில் அனிருத் பாடிய பாடல்!