என்னம்மா டான்ஸ் இது?… லோகா புகழ் கல்யாணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

vinoth
புதன், 8 அக்டோபர் 2025 (09:15 IST)
ரவி மோகனின் 32 வது திரைப்படமாக ஜீனி என்ற திரைப்படம் உருவாகி பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் ஜூனியர் என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

ஏஆர் ரஹ்மான் இசையில் மகேஷ் முத்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்தும் ரிலீஸ் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் நேற்று இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான ‘ஆப்தி ஆப்தி’ ரிலீஸானது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் இணையத்தில் ட்ரோல்களை சந்தித்து வருகிறது. பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் குறிப்பாக பாடலில் கல்யாணி பிரியதர்ஷனின் நடனம் சரியில்லை என்றும் ட்ரோல்கள் பரவி வருகின்றன. கடந்த மாதம்தான் லோகா படத்துக்காக கல்யாணி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னம்மா டான்ஸ் இது?… லோகா புகழ் கல்யாணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

மலையாள சினிமாவில் புதிய உச்சம்… லோகா படைத்த சாதனை!

சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

இன்னும் உறுதியாக ஹீரோயின்… சிம்பு படத்தின் இறுதிப் பட்டியலில் மூன்று நடிகைகள்!

தீபாவளிக்கு வெளியாகும் ‘தனுஷ் 54’ பட அப்டேட்…!

அடுத்த கட்டுரையில்
Show comments