Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத்திற்கு புதிய சொகுசு கார் பரிசளித்த கலாநிதி மாறன்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (20:46 IST)
‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை படக்குழு கொண்டாடி வரும் நிலையில், ரஜினி, நெல்சனை தொடர்ந்து, அனிருத்திற்கு செக் வழங்கி வாழ்த்திய நிலையில் தற்போது சொகுசு கார் வழங்கியுள்ளார் கலாநிதி மாறன்.

தமிழ் சினிமாவின்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த  ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான  படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ண உள்ளிட பலர் நடித்திருந்தனர்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல  வரவேற்பு பெற்று வசூல் குவித்து வருகிறது. இதுவரை இப்படம்   ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் செக் மற்றும் சொகுசு கார் வழங்கி வாழ்த்திய சன்பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன், இன்று இசையமைப்பாளர் அனிருத்திற்கு ‘செக்’ வழங்கி வாழ்த்தினார்.

இதையடுத்து, அனிருத்திற்கும் தற்போது புதிய ‘போர்சே’ என்ற பிரபல  சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ மற்றும்  புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments