Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடிவாசல் எப்படி இருக்கும் என அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணு!

வாடிவாசல் எப்படி இருக்கும் என அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணு!
, திங்கள், 5 ஜூலை 2021 (16:40 IST)
வாடிவாசல் படத்தை பாகுபலி போல உருவாக்க உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதனால் வாடிவாசல் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வாடிவாசல் படத்தைப் பற்றி பேசும்போது படத்தை பாகுபலி போல பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் விக்ரமன் மகனை அறிமுகப்படுத்தும் கே எஸ் ரவிக்குமார்!