Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘அவர ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’ – கட்சிக்காரரின் அட்வைஸுக்கு கலைஞரின் பதில்- வைரமுத்துவின் பதிவு!

Advertiesment
‘அவர ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’ – கட்சிக்காரரின் அட்வைஸுக்கு கலைஞரின் பதில்- வைரமுத்துவின் பதிவு!

vinoth

, சனி, 11 மே 2024 (10:56 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் இரு பெரும் ஜாம்பவான்களாக வலம் வந்தவர்கள் இளையராஜாவும் வைரமுத்துவும். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் இன்றளவும் செவ்வியல் பாடல்களாக உள்ளன. ஆனால் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. திரைத்துறைய சேர்ந்த எத்தனையோ பேர் இருவரையும் மீண்டும் இணைத்து வைக்க முயன்றும் அது நடக்கவில்லை.

இந்நிலையில் வைரமுத்து சமீபகாலமாக பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் அவருக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி மலரும் நினைவு ஒன்றை பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் “கலைஞருக்கும், அ.இ.அ.தி.முகவிலிருந்து தி.மு.கவில் வந்துசேர்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கும் நடந்த உரையாடல்.  எனக்கு வாய்மொழியாக வந்தது; தயக்கத்தோடு  கலைஞரையே கேட்டு உறுதி செய்தது. சொற்கள் மாறியிருக்கலாம்; சொன்னபொருள் இதுதான்.

‘வைரமுத்த ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’ ‘ஏன்? எதனால?’ ‘அவரு உங்களப்
புகழ்ந்து பேசுறாரே தவிர ஜெயலலிதாவ எப்பவும் திட்ட மாட்டேங்குறாரு’ (கலைஞர் சிறு சிந்தனைக்குப் பிறகு) ‘நீ அங்க இருந்து இங்க வந்திருக்க அங்க இருந்தபோது என்னத் திட்டுன; இங்க இருந்து அந்த அம்மாவத் திட்டுற. வைரமுத்து எப்பவும் இடம் மாறல.  ஜெயலலிதா வைரமுத்துக்கு எதிரியும் இல்ல அவரு தமிழுக்காக நம்மகூட நிக்கிறாரு.

இன்னொண்ணு அவரு யாரையும் திட்டமாட்டாரு; அது அவரு இயல்பு’  கோள் சொன்னவர் குறுகிப்போனார் இப்படித்தான் கேடுகள் ஈட்டி எறியும்போதெல்லாம் கேடயமாவது சத்தியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் 'குற்றம் கடிதல் 2' திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்