Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்… அதுவும் விஜய் சேதுபதி படத்தில்!

நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்… அதுவும் விஜய் சேதுபதி படத்தில்!
, செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:28 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகம் ஆகவுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம். பல படங்களுக்கு நடனம் அமைத்திருந்தாலும், கலா மாஸ்டர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் காத்து வாக்குல ரெண்டு காதல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னிடம் வேலை செய்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பதில்லை! பா ரஞ்சித் ஆவேசம்!