ஐந்து வருடத்தில், செஞ்சுரி போட ஆசைப்படும் காஜல்!!

வியாழன், 7 செப்டம்பர் 2017 (14:43 IST)
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவுள்ள காஜல் அகர்வால், இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார்.


 
 
30 வயதை கடந்தாலும் இன்னும் சற்று இளமையாகவே காணப்படுகிறார். விவேகம் படத்தை எதிர்ப்பார்த்து இருந்த அவருக்கு அந்த படம் சற்று ஏமாற்றத்தை அளித்தது என அவரின் நெருங்கிய வாட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 
 
இதனால், அடுத்து விஜய்யுடன் நடித்த மெர்சல் படம் தனக்கு நல்ல நடிகை எனப் பெயர் வாங்கித்தரும் என எதிர்பார்க்கிறார் காஜல்.
 
மேலும், தெலுங்கிலும் நாயகியாக நடிப்பதோடு சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்.
 
இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் காஜல் அகர்வால் மேலும், 50 படங்களில் நடித்து செஞ்சுரி போடவேண்டும் என ஆசைப்படுகிறார். 
 
அதுவும் வாய்ப்புகள் கிடைத்தால் இன்னும் ஐந்து வருடத்தில் செஞ்சுரி போட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் காஜல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட்டம் போடும் தகதக நடிகை