Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பில்டப் கொடுக்கும் காஜல் அகர்வால்

பில்டப் கொடுக்கும் காஜல் அகர்வால்
, திங்கள், 22 மே 2017 (13:33 IST)
‘நான் தான் தமிழில் முன்னணி நடிகை’ என்று பில்டப் கொடுக்கிறாராம் காஜல் அகர்வால்.


 


‘அற்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்’ என்பார்கள். காஜல் அகர்வாலும் அப்படித்தான் நடந்து கொள்கிறார் என்கிறார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி காஜல் அகர்வால். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் பெயரிடப்படாத படத்திலும், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் காஜல்.

இதனால், தன்னைத் தேடிவரும் தயாரிப்பாளர்களிடம், ‘ஒரே சமயத்துல அஜித், விஜய்க்கு ஜோடியா நடிக்கிறேன். ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ என அடுத்தடுத்து விஜய் கூட நடிக்கிறேன். தமிழ்ல இப்போ நான் தான் நம்பர் 1. எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும், இந்த மாதிரியான கதைகளில் நான் நடிக்க மாட்டேன்’ என ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீரியட் ஃபிலிம் எடுக்கும் மிஷ்கின்